கோடிகளில் சம்பாதித்தாலும் இதை செய்ய வேண்டும்.. நடிகை தமன்னா சொன்ன விஷயம்

Tamannaah Actress
By Kathick Feb 26, 2026 02:30 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் தமன்னா. இவர் நடிப்பை தாண்டி தற்போது பல சிறப்பு பாடல்களில் நடனமாடி வருகிறார். இதற்காக அவர் ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில் நடிகை தமன்னா நகைக்கடை ஒன்றை திறந்தார். இதன் திறப்பு விழாவிற்கு சமந்தா, காஜல் அகர்வால் என இந்திய நடிகைகள் பலரும் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடிகளில் சம்பாதித்தாலும் இதை செய்ய வேண்டும்.. நடிகை தமன்னா சொன்ன விஷயம் | Tamannaah Advice To Actors Invest

சினிமாவில் முன்னணி நடிகையாகவும், மறுபக்கம் தொழிலதிபராகவும் ஜொலித்துக்கொண்டிருக்கும் தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.

இதில் "நடிகர்கள் என்னதான் கோடிகளில் சம்பாதித்தாலும், அதை சரியாக முதலீடு செய்து அதை பல மடங்கு ஆக்குவது எப்படியென பார்க்க வேண்டும். இல்லை என்றால் இறுதியில் எதுவுமே இல்லாமல் போய்விடும்" என கூறியுள்ளார். 

கோடிகளில் சம்பாதித்தாலும் இதை செய்ய வேண்டும்.. நடிகை தமன்னா சொன்ன விஷயம் | Tamannaah Advice To Actors Invest