விஜய் வர்மாவை பிரேக்கப் செய்தாரா நடிகை தமன்னா!! காரணம் இதுதானாம்..
தமன்னா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. நடிப்பை தாண்டி தமன்னாவின் நடனம்தான் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஜெயிலர் படத்தில் துவங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி ரசிகர்களை கவர்ந்து செல்கிறார். நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதை நாம் அறிவோம். இந்த ஆண்டு இவர்களுடைய திருமணம் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது நடிகை தமன்னா, காதலர் விஜய் வர்மாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. காதல்முறிவை சுட்டிக்காட்டும் வண்ணம் தமன்னா ஒரு பதிவினை பகிர்ந்துள்ளது தான் அதற்கு காரணமாம்.
அதில், 'காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, எதிரில் உள்ளவர்களுக்கு ரகசிய ஆர்வத்தைக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவர் உங்களை அழகாகப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அழகாகப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன பிரேக்கப் பண்ணிட்டீங்களா என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.