ஆமாம் அவரை தான் காதலிக்கிறேன்!! உண்மையை உடைத்த நடிகை தமன்னா..
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை தமன்னா, முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாகினார். டாப் நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வந்தார்.
ஆரம்பத்தில் இருந்த தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கிலும், நடிகர்களுடன் நெருக்கமாகவும் படுக்கையறை காட்சியிலும் நடித்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளதை பகிர்ந்திருந்தார். தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமன்னா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் முத்தம் கொடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய் வர்மாவுடன் ஏற்பட்ட காதலை பற்றி பகிர்ந்துள்ளார். எங்களுடைய காதல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தின் போது துவங்கியதாகவும் சக நடிகர்கள் நிறைய பேர் என்னுடன் நடித்துள்ளார்கள். அவர்கள் மீது எனக்கு ஈர்ப்பு வரவில்லை.
ஆனால் இவருடன்(விஜய் வர்மா) வந்துள்ளது எனில் அது எனக்கு ஸ்பெஷல். நான் எதிர்ப்பார்த்த ஒருவர் இவர் தான். யார் ஒருவரிடம் அவருக்காக எதையும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோமோ அவர்தான் நமக்கானவர். ஆமாம் அவர் தான் என் மகிழ்ச்சியின் இருப்பிடம் என்று தமன்னா தன் காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.