பிரபல நடிகருடன் ரகசிய டேட்டிங்!! வீடியோவில் சிக்கிய நடிகை தமன்னா..
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, வியாபாரி, கல்லூரி, படிக்காதவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் சூர்யா, விஜய், அஜித், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
பாகுபலி படத்தில் அவந்திகா ரோலில் நடித்து வந்த தமன்னா பாலிவுட் பக்கம் சென்று கிளாமரில் தூக்கலாக நடித்து வருகிறார்.
கிளாமரில் பொது இடங்களுக்கு சென்று வாய்ப்பிளக்க வைத்த தமன்னா, மும்பையில் செட்டிலாகி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், 33 வயதாகும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இரவு நேரத்தில் முத்தம் கொடுத்த வீடியோவும் பரவி பரப்பரப்பாக பேசப்பட்டு வந்தது.
தற்போது விஜய் வர்மாவுடன் இரவு நேரத்தில் டேட்டிங்கிற்காக காரில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரையில் இருவரும் காதலை பற்றி எதுவும் கூறாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.