தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் கவர்ச்சி ஹீரோயின்கள்..பாலிவுட்டில்!! தமன்னா ஓபன் டாக்..
தமன்னா
கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.
இதனையடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்தவர், தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார். நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, பாலிவுட், சவுத் படங்களில் நடித்தது குறித்த கருத்தினை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் - தென்னிந்தியா
அதில், பாலிவுட் இந்தி படங்களில் நடிகர்களுக்கு தங்களின் விருப்பத்திற்கான கதைகளை தேர்வு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அங்கு நடிப்புத்திறனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் அழுத்தமான கலைநயமிக்க ரோல்கள் ஒருபுறம், மற்றொருபுறம், முழுமையான வணிக ரீதியான பொழுதுபோக்கு படங்கள் என்று பிரிந்துள்ளது.

அங்கு நடிகைகள் தங்களுக்கு எது செட்டாகுமோ அதை தேர்வு செய்து நடிக்கலாம், ஆனால் இரண்டையும் சமமாக பேலென்ஸ் செய்து போகிறவர்கள் தான் அங்கு சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்கள்.
நான் தென்னிந்திய சினிமாத்துறையில் பல வருடங்களாக நடிக்கிறேன். என்னுடைய அனுபவத்தில், தென்னிந்தியாவில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்கள் முழுக்க முழுக்க ஹீரோக்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதனால் பெண் ரோல்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

சினிமாக்களில் ஹீரோயின் காதலியாக வருவது, பாடல்களில் கவர்ச்சியாக நடனமாடுவது மட்டுமே நடிகையை பயன்படுத்துகிறார்கள். பெண்களை பார்க்கும் பார்வையே ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள், ஆதிக்கப்பாணியில்தான் இருக்கிறது, இதை நான் என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார் தமன்னா.
இது தற்போது
பேசுபொருளாகி தமன்னாவை விமர்சித்த நிலையில்,
தான் கூறிய கருத்து வேறு, முழுமையாக தெரிந்து
பேசுங்கள் என்று கூறி, அவர் அளித்த பேட்டியின்
லிங்கை பகிர்ந்துள்ளார் தமன்னா.