இரண்டே இரண்டு படம் தான்!! தமன்னா இப்படி எல்லைமீறிய காட்சியில் நடிக்க இதுதான் காரணம்..

Tamannaah Indian Actress Actress
By Edward Jun 15, 2023 11:15 AM GMT
Report

வட இந்திய நடிகையாக தமிழ் சினிமாவில் கேடி படத்தில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை தமன்னா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்தாலும் கிளாமரில் கொஞ்சம் தாராளம் காட்டி தான் நடித்து வந்தார்.

இரண்டே இரண்டு படம் தான்!! தமன்னா இப்படி எல்லைமீறிய காட்சியில் நடிக்க இதுதான் காரணம்.. | Tamannaah Doing Glamour Roles Reason Tamil Flop

அந்தமாதிரியான காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று 2016ல் பேட்டியொன்றில் தமன்னா கூறியிருந்தார். ஆனால் தற்போது பாலிவுட் பக்கம் போனதும் அங்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்க கிளாமரில் எல்லைமீறி நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் ஜீ கர்தா என்ற வெப் தொடரில் முகம் சுழிக்க வைக்கும் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சிகளில் எல்லைமீறி நடித்துள்ளார்.

தற்போது அந்த தொடரின் காட்சிகள் இணையத்தில் மிகப்பெரியளவில் பகிரப்பட்டு தமன்னா டிரெண்ட்டாகி வருகிறார். இந்நிலையில் இப்படி தமன்னா இந்த அளவிற்கு மாற முக்கிய காரணம் தன்னுடைய மார்க்கெட் இடையில் பரிபோனது தானாம். விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படம் தான் தமன்னா கடைசியில் நடித்து வெளியான தமிழ் படம்.

அப்படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பின் தமன்னா வாய்ப்பில்லாமல் தமிழில் இருந்து ஒதுக்கப்பட்டு வந்தார். இதற்காக தான் தன் மார்க்கெட்டை அதிகரிக்க போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி இளசுகளை கவர்ந்து வந்தார்.

இரண்டே இரண்டு படம் தான்!! தமன்னா இப்படி எல்லைமீறிய காட்சியில் நடிக்க இதுதான் காரணம்.. | Tamannaah Doing Glamour Roles Reason Tamil Flop

அதுமட்டும் போதாது என்று சில காட்சிகளில் தாராளம் காட்டி நடித்ததால் சம்பளமும் கூடியதால் தான் இந்த மாதிரியான முடிவினை எடுத்திருக்கிறாராம் தமன்னா.

சம்பளமும் தன்னுடைய மார்க்கெட்டை மறுபடியும் பிடிக்கவே இப்படியான காட்சியில் நடித்து இந்தியாவிலேயே தற்போது டிரெண்ட்டாகி வரும் நடிகையாக திகழ காரணமாக அமைந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் அரண்மனை 4 படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.