நடிகை தமன்னாவுக்கு ரூ. 6 கோடி ஊதியம் வழங்கிய கர்நாடகா அரசு.. இதுக்காகவா?
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் பக்கம் கலக்கி வரும் தமன்னா, மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக வலம் வருகிறார்.
இதுக்காகவா?
தினமும் ரூ. 12 லட்சம் மைசூர் சாண்டல் சோப்களை கர்நாடகா அரசு தயாரிக்கிறது. இதன் வர்த்தகத்தை பெரிதாக்குவதற்காக அகில இந்தியளவில் பிரபலமானவர்களை, மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதர்களாக நியமித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நடிகை தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். தற்போது, இவருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை தமன்னாவுக்கு ரூ. 6.27 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.