வாய்ப்பிள்ளாமல் இந்திக்கு தாவிய நடிகை!! நயன்தாரா, சமந்தாவுடன் அந்த விசயத்தில் போட்டிபோடும் திருமணமாகாத நடிகை...
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமானவர் நடிகை தமன்னா. மும்பை மாடலிங் துறையில் இருந்து தெலுங்கில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

சொத்து விவரம்
அவர் நடிப்பில் பாகுபலி, F1, F2, F3 போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. ஆனால் தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. தற்போது இந்தி மொழியில் கவனம் செலுத்து நடிகை தமன்னாவும் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. ஒரு ஆண்டுக்கு தமன்னா 12 கோடி அளவில் சம்பாதிக்கிறாராம். 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 110 கோடி.

விளம்பரம்
ஒரு ஐட்டம் பாடலுக்காக 60 லட்சம் வரை சம்பளமாகவும் ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாட 10 நிமிடத்திற்கு 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராம் விளம்பரம் மற்றும் நகை, ஆடை அணிகலன் போன்ற இதர பொருட்களின் விளம்பரம் உட்பட நடிப்பை தாண்டி மற்றதிலும் சம்பாதித்து வருகிறார்.
இன்னும் திருமணமாகாத நடிகை தமன்னா, சமந்தா, நயன் தாரா இணையாக போட்டிப்போட்டு வருகிறார். சமந்தாவின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 101 கோடியாகவும், நயன் தாராவின் சொத்து மதிப்பு 165 கோடியாகவும் இருந்துள்ளது.