என்னது சன்னி லியோன் படத்தில் நடிகை தமன்னாவா.. இதை எதிர்பார்க்கல!

Tamannaah Sunny Leone Actress
By Bhavya Aug 24, 2025 06:30 AM GMT
Report

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

தற்போது இவர் அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் 'வ்வான்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

என்னது சன்னி லியோன் படத்தில் நடிகை தமன்னாவா.. இதை எதிர்பார்க்கல! | Tamannaah Next Project Details

இதை எதிர்பார்க்கல!  

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் பக்கம் கலக்கி வரும் தமன்னா தற்போது சன்னி லியோன் படத்தில் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் ராகினி எம்எம்எஸ், இதன் இரண்டாம் பாகம் 2014ல் வெளியானது.

வினய் யெனகண்டுலா என்பவர் இயக்கிய இந்த படத்தில் சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் ஏக்நாத் கபூர் தெரிவித்துள்ளார். 

என்னது சன்னி லியோன் படத்தில் நடிகை தமன்னாவா.. இதை எதிர்பார்க்கல! | Tamannaah Next Project Details