முத்தக் காட்சிகளில் நடிக்க நோ!! திடீர் முடிவெடுத்த நடிகை தமன்னா..
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.
இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில், தன்னுடைய திரைத்துறையின் ஆரம்பத்தில் தன் மீது கவர்ச்சி நாயகி என்ற முத்திரை குத்தப்பட்டது.
தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்தபோதிலும், முத்தக்காட்சியில் நடிக்கக்கூடாது என்று நினைத்தேன்.
இதனால் சவாலான பல கதாபாத்திரங்களை நான் இழந்தேன். முத்தக்காட்சிகளுக்கு சரி என்று சொல்லியிருந்தால், அப்போதே பலமான படங்களில் நடித்திருப்பேன்.
சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முத்தக்காட்சி வேண்டாம் என்ற விதியை மாற்றிக்கொண்டேன் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.