காதலுக்கும் உறவுக்கும் உள்ள வித்தியாசம்..அது அப்படி இருக்கலாம்!! ரிலேஷன்ஷிப் பற்றி ஓபனாக பேசிய தமன்னா..
நடிகை தமன்னா
பாலிவுட் சினிமாவில் தற்போது சென்ஷேஷ்னல் நடிகையாகவும் கிளாமர் குயினாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா. தென்னிந்திய சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் நடித்து பிரபலமான தமன்னா, தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரின் நடன அசைவுகள் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக ஈர்த்து வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா, விருதுவிழாக்களுக்கும் போட்டோஷூட்டுக்கும் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது தனது திருமணம் மற்றும் ரிலேஷன்ஷிப் பற்றி பகிர்ந்துள்ளார் தமன்னா. அதில், ஒரு சிறந்த வாழ்க்கைத்துணையாக மாறுவதற்கு நான் முயற்சி செய்து வருகிறேன். ஒருவருடைய வாழ்க்கையில் நான் வருவது, அவர்களின் முந்தைய வாழ்க்கையில் ஏதோ நல்ல காரியங்கலை செய்திருக்கிறார்கள் என்று உணரவேண்டும்.
காதலுக்கும் உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் குழப்பிக்கொள்கிறார்கள். அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவாகவோ அல்லது நண்பர்களுக்கு இடையிலானதாகவோ இருக்கலாம். காதல் என்பது நிபந்தனையற்றதாக மட்டுமே இருக்க முடியும்.
அது ஒரு தலைப்பட்சமாக இருந்தாலும் அது உங்களுடைய காதல் என்று தமன்னா தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னுடைய காதல் மற்றும் திருமணம் குறித்த அறிவிப்பை விரைவில் தமன்னா வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.