விரைவில் விஜய் - ராஷ்மிகா திருமணம்!! வைரலாகும் தமன்னாவின் விவகாரமான ஆசை..
விஜய் - ராஷ்மிகா
நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டவை காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனையில் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ராஷ்மிகா - விஜய் திருமணத்திற்கு பிரபலங்கள் மற்றும் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லாமல் எளிமையான முறையில் நடக்கவுள்ளதாம். பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே திட்டமிட்டுள்ள இந்த ஜோடி திருமணத்திற்கு பின் 2 மாதங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம்.
இது ஒரு பக்கம் இருக்கையில் நடிகை தமன்னா சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியொன்றில் விஜய் தேவரகொண்டா பற்றி கூறியது தற்போது பகிரப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தா எடுத்த 'சாம் ஜேம் சமந்தா' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமன்னா பேசியிருக்கிறார்.
தமன்னா
அதில், லிப் லாக் காட்சியில் நடிக்கக்கூடாது என்ற கொள்கையில் இருக்கிறேன். ஆனால் விஜய் தேவரகொண்டாவுடன் மட்டும் லிப் லாக் செய்ய ஆசை என்று கூறியிருக்கிறார்.
இது கூறிய சில ஆண்டுகளில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் படுமோசமான காட்சியில் விஜய் வர்மாவுடன் நடித்து அனைவருக்கு ஷாக் கொடுத்தார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
