விராட் கோலியுடன் நடிகை தமன்னா டேட்டிங்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை
திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அதே போல் உலகளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி.
இவர்கள் இருவரும் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன் விளம்பர படத்தில் நடித்திருந்தனர். அப்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து தமன்னாவிடம் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த தமன்னா "நாங்கள் இருவரும் அந்த விளம்பரத்தில் நடித்த போது 4 வார்த்தைகள் மட்டுமே பேசினோம். அவ்வளவு தான். அதற்கு பிறகு நான் விராட்டை சந்திக்கவோ பேசவோ இல்லை. ஆனால், நான் பணிபுரியும் பெரும்பாலான நடிகர்களை விட அவர் சிறந்த மனிதர் என்று நான் சொல்ல வேண்டும்." என்று தெரிவித்தார்.
இதன் மூலம் இந்த டேட்டிங் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை தமன்னா. இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.