சாமியாராக அவதாரம் எடுத்த ரஜினி பட நடிகை.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
தமன்னா
சவாலான மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்தவர் தமன்னா. இவர் 2006 -ம் ஆண்டு வெளியான 'கேடி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தமன்னா தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார்.
சாமியாரா?
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா, தற்போது சாமியார் வேடத்தில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள், தமன்னா சாமியாராக மாறிவிட்டாரா? என்று அதிர்ச்சி ஆகியுள்ளனர்.
அந்த வீடியோவில் தமன்னா ஈஷாவில் உள்ள லிங்க பைரவி கோவிலின் பெருமைகளை பற்றி கூறியுள்ளார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டிவரும் தமன்னா, படம் ஷூட்டிங் இல்லாத நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்பு கூட தமன்னா இமயமலை சென்று ஆன்மிக பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.