விஜய்யின் அந்த படத்துல ஏன் நடிச்சேன்னு இருந்துச்சி!! நடிகை தமன்னா கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை தமன்னா.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த தமன்னா, சமீபகாலமாக படுக்கையறை காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமன்னா காவாலா பாடலில் ஆட்டம் போட்டு டிரெண்டிங் ஆனார். ஜெயிலர் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த படத்துல சுமாரா நடிச்சிருக்க, பாக்கவே கூடாதுன்னு நினைக்கிற படம் என்ன என்ற கேள்விக்கு தமன்னா வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
நிறைய படம் இருக்கிறது, படம் பிடிக்கும் ஆனால் சில காட்சிகளில் நான் நடித்தது பிடிக்கவில்லை, அது சுறா படம் தான். திரும்பவும் அந்த ரோலில் நான் எப்பவும் நடிக்க மாட்டேன்.
ஆனால் சுறா விரும்பி தான் நடித்தேன் என்று தமன்னா தெரிவித்துள்ளார். ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் அதில் நடித்தே ஆகனும் என்றும் தெரிவித்துள்ளார்.