ஒல்லி நடிகரை வாசலோடு விரட்டியடித்த மாமியார்! விவாகரத்தால் மதிப்பு போச்சா?

divorce motherinlaw tamilactor boyasgarden
By Edward Mar 17, 2022 06:19 AM GMT
Report

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகரின் மகளை காதலித்து திருமணம் செய்ததோடு போயஸ் கார்டனில் வீட்டையும் கட்டிக்கொடுத்த செட்டிலாகினார் ஒல்லி நடிகர். சமீபகாலமாக நல்ல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த அந்த நடிகர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 18 வருட சினிமா வாழ்க்கையை முடித்து கொண்டார்.

பிள்ளைகளுக்காக கூட மன மிரங்காத இருவரும் சினிமா தான் முக்கியம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்களாம். அப்படி ஒரு வேலை நிமர்த்தமாக ஒல்லி நடிகர் போய்ஸ் கார்டனுக்கு சென்று மாமியாரை சந்திக்க சென்றுள்ளாராம்.

வீட்டின் கேட்டில் இருந்து பாதுகாவலரிடம் கேட்க நான் யாரை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டாராம் மாமியார். உடனே ஒல்லி நடிகர் மாமியாருக்கு கால் செய்ய அதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டாராம்.

இதுக்கு மேல் இங்கிருந்தால் மரியாதை இல்லை மதிப்பு இல்லை என்று நினைத்து அங்கிருந்து கிளம்பி தன் வீட்டிற்கே சென்றுவிட்டாராம். என்ன தான் இருந்தாலும் மகளை வேண்டாம் சொன்னவராச்சே அம்மாக்கு இந்த கோபம் கூட இருக்காதா என்று கோடம்பாக்கத்தினர் புலம்பி வருகிறார்கள்.