அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கு 2 கோடியை ஆட்டையை போட்டு வேறொரு நடிகையுடன் திருமணம் செய்த நடிகர்

Gossip Today
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து டாப் நடிகராகவும் ரோமியோ மன்னராகவும் திகழ்ந்து வந்தவர் தான் அந்த நடிகர். அந்த நடிகருக்கு பிறகு தன் மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்த டாப் இயக்குனர் படத்தில் கலமிறக்கி இருக்கிறார் அந்த ரோமியோ மன்னர்.

அப்படியே செல்ல முதல் படமே மகனுக்கு செட்டாகாமல் தோல்வியை சந்தித்தார். அதன்பின் சிறு இயக்குனர்கள் படத்தில் காமெடியாகவும் அடல்ட் படமாகவும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி ஒரு படத்தில் நடிக்கும் போது வயது மூத்த நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டு பல விசங்களை செய்து வந்தார்.

ஒரு கட்டத்தில் கடனில் இருக்கும் போது நடிகையிடம் சில கோடி பணத்தை வாங்கியிருக்கிறார். அப்படியே சென்று கொண்டிருக்க வேறொரு படத்தில் கேரளத்து நடிகையுடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார் அந்த வாரிசு நடிகர்.

அப்படத்தில் ஆரம்பித்த காதல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் அந்த காதல் ஜோடி. ஒரு வழியாக வயது மூத்த நடிகையை கழட்டிவிட்டு கேரளத்து நடிகையை சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார் வாரிசு நடிகர்.

அதில் என்ன அதிர்ச்சி என்றால் பெத்த அப்பாவுக்கே மகன் ஒரேவொரு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளது தான் கோலிவுட்டில் தற்போது டாப் டாப்பிங். அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கு என்று வாரிசு செய்த வேலையை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.