அடேங்கப்பா நடிகர் விமல் சொத்து மதிப்பு இத்தனை கோடியா!!

Vimal Net worth
By Kathick Jul 08, 2024 04:45 PM GMT
Kathick

Kathick

Report

திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விமல். இவர் பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இதன்பின் களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து கலகலப்பு, தூங்கா நகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை.

அடேங்கப்பா நடிகர் விமல் சொத்து மதிப்பு இத்தனை கோடியா!! | Tamil Actor Vimal Net Worth

ஆனால், விலங்கு எனும் வெப் தொடரின் மூலம் மிரட்டலான கம் பேக் கொடுத்தார். மேலும் இவர் கைவசம் தற்போதுசார், போகுமிடம் வெகு தூரமில்லை, தேசிங்கு ராஜா 2 போன்ற படங்கள் உள்ளன.

இந்த நிலையில், நடிகர் விமலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.