தப்பித்த அஜித், தனுஷ், சூர்யா!! விஜய்க்கு அந்த நம்பரில் தான் கண்டம்...
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பண்டிக்கை காலங்களில் ரிலீஸ் ஆகும் படங்களின் எதிர்ப்பார்ப்பு இரு மடங்காக தான் இருக்கும். ஆனால் அப்படம் சில நேரத்தில் ஏமாற்றத்தை கொடுக்கும்.
அப்படி நடிகர்களின் 25, 50 வது படங்களை பெரியளவில் கொண்டாடப்படும். அந்தவகையில் நடிகர் கார்த்தியின் 25வது படம் பிரபலங்கள் கலந்து கொண்டு பெரியளவில் கொண்டாடப்பட்டது. ஆனால் ஜப்பான் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
தீபாவளிக்கு கூட வசூல் குறைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், நடிகர் ஜெயம் ரவியின் 25 வது படமான பூமி திரைப்படம் பிளாப்பானது. ஆர்யாவின் 25வது படமான வாசுவும் சரவணனும் படம் தோல்வியை சந்தித்தது.
விஷாலின் சண்டக்கோழி படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தாலும் 25 வது படமான சண்டக்கோழி 2 பெரிய பிளாப் படமானது.
நடிகர் விஜய்யின் 25 வது படமான கண்ணுக்குள் நிலவு படம் தோல்வியை சந்தித்து 25 நம்பர் கண்டமாக மாறியது.
ஆனால் அஜித்தின் 25 வது படம் அமர்களம், தனுஷின் 25வது படமான விஐபி, சூர்யாவின் 25வது படமான சிங்கம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது லியோ படம் 25 வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளது. படம் வசூலில் 600 கோடியை தொடபோவது என்றாலும் கதை விசயத்தில் லோகேஷ் கனகராஜ் கோட்டை விட்டுவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.