உன்னை யாரும் கல்யாணம் பண்ணமாட்டாங்கன்னு சொன்னாங்க!! வேதனையுடன் சாதித்த பிரபல நடிகை..
இந்திய சினிமாவில் பல நடிகைகள் 40, 50 வயதை கடந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமணம் பற்றிய வதந்திகளும் இணையத்தில் வந்துக்கொண்டு தான் இருக்கும்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகை, தான் சந்தித்த திருமணம் குறித்த விமர்சனத்தை பற்றி வேதனையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மீனாட்சி செளத்ரி
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் நடிகை மீனாட்சி செளத்ரி தான் அந்த நடிகை. கொலை, சிங்கப்பூர் சலூன், விஜய்யின் தி கோட் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார் மீனாட்சி.
நேற்று நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிப்பில் வெளியான Anaganaga Oka Raju என்ற படத்தில் மீனாட்சி ஹீரோயினாக நடித்துள்ளார். படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இளமை பருவத்தில் எதிர்கொண்ட விமர்சனம் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், ஹரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். கிராமத்தில் என் நிறம் மற்றும் அழகு குறித்து விமர்சனம் செய்வது மட்டுமின்றி உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்று கூறி கிண்டல் செய்தனர்.
சுதந்திரம்
இப்படி பல விமர்சனங்கள் என்னை காயப்படுத்தியது. இதனால் நான் வைராக்கியத்துடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து டாக்டராக விரும்பினேன், நான் அழகாக இருக்கிறேன் என்பதை உலகுக்கு காட்ட நினைத்தேன்.

நான் என்ன வேண்டுமானாலும் செய்ய என் குடும்பம் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். அழகை நிரூபிக்க மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். ஜெயித்ததை கொண்டாட என் கிராமத்திற்கு போனேன். பழங்கால மக்கள் வாழும் கிராமம் என்பதால் முதலில் என்னை விமர்சித்தார்கள்.
மோசமான தொழிலில் ஈடுபடுகிறேன், பிகினி அணிவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று எல்லோரும் என்னை எதிர்த்தார்கள். ஆனால் இப்போது என்னால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது என்னை மிகவும் மதித்து வரவேற்கிறார்கள் என்று மீனாட்சி செளத்ரி தெரிவித்துள்ளார்.
