6 குழந்தைக்கு தந்தையான நடிகர்!! திருமணம் செய்யாமல் 2 குழந்தை பெற்ற பிரபல நடிகை..

Gemini Ganesan Pushpavalli Indian Actress
By Jai Jun 06, 2026 06:21 AM GMT
Report

புஷ்பவல்லி

தென்னிந்திய சினிமாவில் மிகவும் அழகான நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை புஷ்பவல்லி. ஆந்திராவில் பண்டாபாடு கிரமத்தில் பிறந்தவர் ராஜமகேந்திரபுரத்தில் நடந்த சினிமா ஷூட்டிங்கை பார்க்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளது.

6 குழந்தைக்கு தந்தையான நடிகர்!! திருமணம் செய்யாமல் 2 குழந்தை பெற்ற பிரபல நடிகை.. | Tamil Actress Who Fell In Love With A Famou Actor

அப்படி சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்த புஷ்பவல்லி, சல்மோகனங்கரா என்ற படத்தில் தன்னுடைய 12 வயதில் அறிமுகமாகினார். 1936ல் வெளியான சம்பூர்ண ராமாயணம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து அதற்காக ரூ. 300 சம்பளம் பெற்றிருக்கிறார். அவ்வளவு தொகை அப்போது பெரும் தொகை என்று கூறப்படும் நிலையில், ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான நாயகி என்ற அந்தஸ்த்தை புஷ்பவல்லி பெற்றார்.

6 குழந்தைக்கு தந்தையான நடிகர்!! திருமணம் செய்யாமல் 2 குழந்தை பெற்ற பிரபல நடிகை.. | Tamil Actress Who Fell In Love With A Famou Actor

மாதம் ரூ.2000 வரை சம்பளமாக பெற்ற புஷ்பவல்லி கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்திருப்பார். அப்படிப்பட்ட நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் துயரம் நிறைந்ததாக மாறியது. இளம் வயதில் வழக்கறிஞர் ஐ வி ரங்காச்சாரி என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே நீடிக்காமல் போனது.

ஜெமினி கணேசன்

அந்த சமயத்தில் மிஸ் மாலினி ஷூட்டிங்கின் போது காதல் மன்னன் ஜெமினி கணேசனை சந்தித்துள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட, ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி 6 குழந்தைகள் இருந்ததுள்ளது. 19 வயதான அலமேலு என்பவரை ஜெமினி கணேசன் திருமணம் செய்து 4 குழந்தைகளும், நடிகை சாவித்ரியை திருமணம் செய்து 2 குழந்தைகளும் இருந்துள்ளது.

6 குழந்தைகளுக்கு தந்தையான கணேசன் புஷ்பவல்லியை திருமணம் செய்யாமல் தங்கள் உறவை தொடர்ந்துள்ளார்.

6 குழந்தைக்கு தந்தையான நடிகர்!! திருமணம் செய்யாமல் 2 குழந்தை பெற்ற பிரபல நடிகை.. | Tamil Actress Who Fell In Love With A Famou Actor

இதுகுறித்து ஜெமினி கணேசன், நானும் புஷ்பவல்லியும் ஒன்றாக நடித்தபோது எங்களுக்குள் காதல் பிறந்து நெருங்கி பழகினோம். திருமணத்தை பற்றிய எண்ணம் எங்களுக்கு இல்லை, இரு மனம் விரும்பி பழகுபவர்களுக்கு திருமணம் ஒரு தடை இல்லை.

6 குழந்தைக்கு தந்தையான நடிகர்!! திருமணம் செய்யாமல் 2 குழந்தை பெற்ற பிரபல நடிகை.. | Tamil Actress Who Fell In Love With A Famou Actor

என் குழந்தையை சுமப்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று புஷ்பவல்லி கூறினாலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்னால் முழுமையான அப்பாவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்து, அதை நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி ஏற்றுக்கொள்ளவில்லை. எங்க்ளுக்கு பானு ரேகா, ராதா பிறந்தனர். காலங்கள் செல்ல நாங்கள் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டியிருந்ததால் பிரிந்து சென்றோம்.

நாங்கள் திருமணம் செய்யாததால் விவாகரத்து போன்ற பிரச்சனை எழவில்லை என்று ஜெமினி கணேசன் கூறியிருந்தார். எத்தனை எத்தனை இடிகளும் சூறாவளிகளும் நிகழ்ந்தபோதும், அதனை விரும்பி ஏற்று அத்தனையையும் தாங்கி, வாழ்க்கை சக்கரத்தை சுழலவிட்ட புஷ்பவல்லி, கடும் நீரிழிவு நோய்க்கு உள்ளாகி 1991-ல் மறைந்து போனார்.