90ஸ் கனவுக்கன்னி!! இப்போ ரூ. 2000 கோடிக்கு அதிபதி!! பிசினஸில் இறங்கிய தமிழ் நடிகை..
நடிகை ரம்பா
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக இருந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை, திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டிலாகி காணாமல் போய் தற்போது 2 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை நடிகை ரம்பா தான்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உழவன் படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த படவாய்ப்புகளை பெற்று டாப் நடிகையாகினார்.
முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான ரம்பா, 2010ல் கனடா வாழ் இலங்கை தமிழரும் தொழிலதிபருமான இந்திரகுமார் பத்மநாபன் என்பவை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகினார். திருமணமாகி 3 குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்த ரம்பா சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்துக்கொண்டார்.
2000 ஆயிரம் கோடி சொத்து
தற்போது மீண்டும் இந்தியா பக்கம் வந்துள்ள ரம்பா, கணவரின் தொழிலையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். தயாரிப்பாளர் தானு, சமீபத்தில் நடந்து நிகழ்ச்சி ஒன்றில் ரூ. 2000 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி ரம்பா. அவரின் கணவர் பெரிய பிசினஸ்மேன்.
அவர் என்னிடம் வந்து என் ரம்பாவுக்கு மீண்டும் வாய்ப்பு வரவேண்டும் என்று கேட்டார். அதற்காக படம் எடுக்க வேண்டாம், நல்ல கம்பெனி பார்த்து நானே சொல்கிறேன் என்று அவரிடம் கலைப்புலி தானு கூறியிருக்கிறார்.