தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி நஷ்டம்.. இவ்வளவு மோசமான நிலைமையா
Tamil Cinema
Indian 2
Kanguva
By Karthick Raja
தமிழ் சினிமா கடந்த ஆண்டு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தது. விஜய்யின் கோட், சிவகார்த்திகேயனின் அமரன் உள்ளிட்ட படங்களில் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.
ஆனால், எதிர்பாராத விதமாக சில திரைப்படங்களின் தோல்வி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவிற்கு 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட நஷ்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2024ல் வெளிவந்த 223 தமிழ் படங்கள் பிளாப் ஆகி இருக்கிறது.
அதன் மூலம் ரூ. 1000 கோடிக்கும் மேல் தமிழ் சினிமா துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.