உனக்கென்னப்பா ஜாலியா இருக்க!! Depression மீம்ஸ் பரிதாபங்கள்..
வேலைப்பளு, பொருளாதார சுமை, குடும்ப பொறுப்புகள், நல்ல நிலைக்கு வரவேண்டிய அழுத்தம் என உவை அனைத்தும் ஒருவரின் மனநிலையை அதிகமாக பாதிக்கிறது. அதோடு சமூக ஊடகங்கள் மூலம் உருவாகும் ஒப்பீடு உணர்வும் இதற்கு கூடுதல் தீனி போடுகின்றன.
டிப்ரெஷன், ஸ்ட்ரெஸ்
பலரும் எல்லாம் சரியாக தான் இருக்கிறது’ என்று வெளியில் போலியான சிர்ப்புடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் அவரவரின் மனநிலை பெரும் போராட்டத்தை சந்திக்கிறது.
சந்தோஷமாக இருக்கிறோமா இல்லையா என்று கேட்க யாருக்கும் நேரமில்லை நாமே நம்மை கேட்கவும் நேரம் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு முக்கியமான உண்மையை பலர் மறந்துவிடுகிறார்கள்.
சந்தோஷம் அடுத்தவரின் வாழக்கையை பார்த்து பொறாமைப்படுவதோடு அவரைப்போல் வாழ வேண்டும் என்ற தேவையற்ற ஆசைகளை நாமே உருவாக்கி டிப்ரெஷன், ஸ்ட்ரெஸ்ஸை வரை வைக்கிறோம்.
அப்படி ஸ்ட்ரெஸ் பற்றிய நெட்டிசன்களின் மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.