கமல்ஹாசனை டார்க்கெட் செய்யும் இயக்குனர்கள்! அசரவிடாமல் அடித்து நொறுக்கபோகும் ஆண்டவர்
உலக நாயகனாக மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் கமல்ஹாசன். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், கதை ஆசிரியர், பாடகர் என பன்முகத்திறமை வாய்ந்த கமல் ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து அதன் ரிலீஸ்-காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இடையில் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷன்ல் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் 83 படத்திற்கு அவர் பேனர் கொடுத்து ரிலீஸ் செய்தார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தினையும் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்.
இதைதொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித்தை வைத்து படங்களை தயாரிக்க கதையையும் கேட்டுள்ளார். கதை அரசியல் பாணியில் இருப்பதால் தயாரித்து நடிக்க செய்வாரா இல்லை தன்னுடைய பேனரை பயன்படுத்துவாரா என்று பொருத்துத்திருந்து பார்ப்போம்.
மேலும் இந்த ஆண்டு வெளியான முன்னணி நட்சத்திரங்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்றவர்களின் படங்கள் படுமோசமான கதையாக அமைந்ததால் கமல் ஹாசன் ஒருவரின் படம் தான் பாக்கியாக இருக்கிறது.
விக்ரம் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை மிகப்பெரிய உயரத்தில் பார்ப்பார்கள். அதிலும் பல இயக்குனர்கள் கமல்ஹாசன் அலுவலக வாசலையே டார்க்கெட் செய்தும் இருக்கிறார்களாம்.