நடிச்சது போது 27 வயதான நடிகையை அதற்கு கட்டாயப்படுத்தும் பெற்றோர்! அடம்பிடிக்கும் நடிகை

actor flim tamilnadu
By Jon Jan 19, 2021 04:31 PM GMT
Report

இளம்பருவத்திலேயே இளம் நடிகையாக வளம் வந்து கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் இந்த நடிகை. அக்கட தேசத்தைச் சேர்ந்த அந்த நடிகை தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே வலம் வந்தார். கடந்த சில வருடங்களாக படவாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகையை எப்படியாவது மனதை மாற்றி திருமணம் செய்து வைத்து விடலாம் என நினைத்திருந்த பெற்றோரின் கனவில் மண்ணைப் போட்டு விட்டு தற்போது நம்ம ஊர் பக்கம் டேரா போட்டு விட்டாராம்.

இந்நிலையில் மீண்டும் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக பல நடிகைகளும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இந்த நடிகையை மட்டும் எந்த மேக்கப்பும் போடாமல் அழகான ஹோம்லியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது மீண்டும் தமிழில் ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம்.

இந்த நேரத்தில் அந்த நடிகையின் குடும்பத்தினர் தயவுசெய்து திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த நடிகையை வற்புறுத்தி வருகிறார்களாம். திருமணத்திற்கு பிறகு நடிக்க வந்தால் அது விவாகரத்தில் போய் தான் முடியும் என்பதால் அந்த நடிகை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என பெற்றோரிடம் கூறி விட்டாராம். இருந்தாலும் அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை.

அடுத்த பிளைட் ஏறி வந்து அம்மணியை கடத்தி சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.