வனிதாவின் முதல் காதல்..அவர் பெயரை சொல்லித்தான் பாருங்களே!! விளாசிய பிரபலம்..
வனிதாவின் முதல் காதல்
நடிகை வனிதா விஜயகுமார், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் முதல் காதல் பற்றி பேச வேண்டுமென்றால், இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. அதை சொன்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்துவிடும்.
முதல் காதலை சொல்லாமலே பல ஆண்டுகளை கடந்து வந்துவிட்டேன். என் நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும்தான் இருக்கும். இந்த ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்நபர் என 2 பேருக்குமே நன்றாக தெரியும் என்று வனிதா கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
செய்யாறு பாலு
அதில், வனிதா தன் மீதான கவனத்தை திருப்புவதற்காக, இல்லாத ஒரு விஷயத்தை பேசி அதனை விவாதப்பொருளாக மாற்ற முயலுவதை வழக்கமாக வைத்துள்ளார். அது ஒரு நல்ல நாகரீகமான விஷயம் கிடையாது. தன் முதல் காதலை பற்றி தான் சொன்னால் இந்த தமிழ்நாடே அதிரும் என்று சொன்னார். அப்படி என்றால் முதல் படம் எது, அதன் கதாநாயகன் யார்? அவர் யாரை குறிப்பிட வருகிறார்? என்று யூகித்து வருகிறார்கள்.

வனிதாவின் முதல் படம் 1995ல் வெளியான சந்திரலேகா, கதாநாயகனாக நடித்தவர் விஜய். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் பெரும் வரவேற்பையும் பெற்றது, ஆனால் படமும் சுமாராகவே ஓடியது, இதற்கு அவரது முதல் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் நிலையில் தன் மீது பப்ளிசிட்டி சேர்க்க வேண்டுமென்ற ஒரே காரணத்தில் வனிதா இதனை பேசுகிறார்.
இதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய் மீது திட்டமிட்டு ஒரு எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு விளம்பரத்தைத் தேட வனிதா முயல்கிறார் என்று அப்பட்டமாகவே தெரிகிறது என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.