தெலுங்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தமிழ் சீரியல் நடிகைகள்.. கலகலப்பு வீடியோ

Cooku with Comali Tamil TV Serials Siragadikka Aasai
By Bhavya Jul 01, 2025 11:30 AM GMT
Report

 குக் வித் கோமாளி

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு முதல் சீசன் முதல் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.

தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இணைந்து செஃப் கௌஷிக் நடுவராக இணைந்துள்ளார்.

தெலுங்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தமிழ் சீரியல் நடிகைகள்.. கலகலப்பு வீடியோ | Tamil Serial Actress In Telugu Show

தற்போது, Cooku With Jathirathnalu என்ற பெயரில் குக் வித் கோமாளி தெலுங்கு நிகழ்ச்சி கடந்த ஜுன் 28ம் தேதி படு மாஸாக தொடங்கியுள்ளது.

 தமிழ் சீரியல் நடிகைகள்

இதில் தமிழ் சின்னத்திரையில் கலக்கிய பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இதில் நடுவர்களில் ஒருவராக ராதா இருக்கிறார், போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், சுஜிதா, வித்யூலேகா ராமன், கோமதி ப்ரியா, விஷ்ணுகாந்த் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது, இது தொடர்பான கலகலப்பான முதல் எபிசோட் புரொமோ வெளியாகி உள்ளது. இதோ,