இதுக்கெல்லாம் சர்வேவா! இத்தனை கோடி அரசுக்கு நஷ்டம்! எதுக்கு தெரியுமா?

Tamilnadu Tasmac Wine shop
By Edward Oct 30, 2021 02:28 AM GMT
Report

தமிழக அரசுக்கு கடந்த 6 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் 312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது. எதுக்கெல்லாம் சர்வே செய்து பட்டியல் வெளியிடுறாங்க பாருங்க.

பட்டியலை கேட்ட ஒருவருக்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு வாணிப கழகம், டாஸ்மாக் நிறுவனம் 2010-11ல் ரூ.3.56 கோடி, 2011-12ல் ரூ.1.25 கோடி, 2012-13 ல் ரூ.103.64 கோடி இருந்துள்ளது. மேலும் 2013-14 ல் ரூ.64.44 கோடி, 2015-16 ல் ரூ.67.61 கோடி, 2019-2020 ல் ரூ.71.93 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும்,

6 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் மொத்தம் ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 2020-21 நிதியாண்டின் கணக்குகள் கணக்கிட்டு வருவதாகவும் கூறியுள்ளானர். சாராயக்கடையை மூடு மூடுனு சொல்லி இப்படி நஷ்டத்துல கொண்டு வந்துடிங்களே என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.