லெஜண்ட், விருமன் எல்லாம் ஓரமா போங்க! அதிரவைத்த தமிழக டாஸ்மாக் வசூல்..

Tamil nadu TASMAC
By Edward Aug 16, 2022 03:30 PM GMT
Report

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழக டாஸ்மாக் மற்றும் மதுபான பார் உள்ளிட்டவைகள் மூடப்பட்டது. அப்படியிருக்கும் போது ஆகஸ்ட் 14 ஆம் தேதி டாஸ்மாக்கில் கூட்டம் வழிந்தோடியுள்ளது.

அடுத்த நாள் கடை இல்லை என்று தெரிந்த குடி மகன்கள் மதுபாட்டில்களை வாங்க வரிசைக்கட்டி நின்றுள்ளனர். அப்படி ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஒரே நாளில் வசூலான டாஸ்மாக் விற்பனை வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

சாதாரண நாளை விட சுதந்திர தினத்திற்கு முந்தின நாளில் ரூ. 273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 5 மண்டலங்கள் வரிசையில், மதுரையில் ரூ. 58.26 கோடி, சென்னையில் ரூ. 55.77 கோடி, சேலம் ரூ. 54.12 கோடி, திருச்சி ரூ. 53.48 கோடி, கோவை ரூ. 52.29 கோடியும் வசூல் செய்துள்ளது.

சமீபத்தில் தான் தமிழகத்தில் போதை பொருளுக்கு இடமே கொடுக்க மாட்டேன் என்று சபதம் அளித்த முதல்வரை இது தான் உங்கள் போதை பொருள் தடுப்பா என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.