காதலித்து ஏமாற்றிய நடிகர்!! மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்த நடிகை ஸ்ரீபிரியா..
ஸ்ரீபிரியா
70, 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து டாப் நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. டாப் இடத்தில் இருந்த ஸ்ரீபிரியா, நடிகர் கார்த்திக்குடன் நினைவுகள் படத்தில் சேர்ந்து நடித்தப்போது இருவருக்கும் ஏற்பட்ட காதல் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கார்த்திக், ஸ்ரீபிரியாவைவிட 4 வயது சிறியவராக இருந்தபோதும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததால் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் காதல், திருமணம் வரை சென்றபோது கார்த்திக், திடீரென ராகினியை திருமணம் செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முயற்சி
இதைக்கேட்டு அதிர்ச்சியான ஸ்ரீபிரியா, கார்த்திக்கின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை சரமாரியாக அடித்து அங்கு இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அதன்பின் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவனைக்கு அழைத்து சென்று அவரை காப்பாற்றினார்கள். இதனையடுத்து இந்த விஷயத்துல் பல முன்னணி நடிகர்கள் தலையிட்டு ஸ்ரீபிரியாவை சமாதானப்படுத்தினர் என்று பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பகிர்ந்துள்ளார்.