60 வயதில் இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரரா சல்மான் கான்.. அடேங்கப்பா
Salman Khan
Net worth
By Kathick
இன்று பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 60வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சல்மான் கானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2900 கோடி இருக்கிறது என தகவல் தெரிவிக்கிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

இவருக்கு சொந்தமாக Range Rover SC LWB 3.0, Toyota Land Cruiser LC 200, Audi RS7, BMW X6 மற்றும் Mercedes-Benz GL ஆகிய சொகுசு கார்கள் உள்ளன. ச
ல்மான் கானுக்கு சொந்தமாக மும்பையில் வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என்கின்றனர். மேலும், இவருக்கு பன்வெலில் பண்ணை வீடு உள்ளது. இதனுடைய மதிப்பு ரூ. 80 கோடி ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.