இன்னொருவருடன் படுக்கையை பகிரமாட்டேன்!! 11 வருஷமா பிக்பாஸ்-ஐ ஒதுக்கிய நடிகை..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நட்சத்திரங்களாக முயற்சிக்க பலர் அந்த வாய்ப்பிற்காக ஏங்கி வருவார்கள். அதற்காக பலரும் ஆசைப்படும் நிலையில் ஒரு நடிகை, கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அவர் தான் நடிகை தனுஸ்ரீ.
தனுஸ்ரீ
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமான தனுஸ்ரீ, சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தன்னை கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுமாறு பிக்பாஸ் தரப்பில் இருந்து கேட்டுள்ளனர்.
ஆனால் முடியாது என்று அவர் கூறியதாகவும் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் சம்பளமாக தருகிறோம் என்று கூறியும் அதற்கு எல்லாம் மயங்கவில்லை என்றும் கூறியிருக்கிறாராம்.
கோடி கோடியாக கொட்டுனாலும்
அதற்கு காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான் எனது பெட்டில் இன்னொருவருடன் படுத்து தூங்க வேண்டும். அப்படி என்னால் எனது படுக்கையை வேறொருவருடன் பகிர்ந்துக்கொள்ள முடியாது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே அறையில் ஆண்களும் பெண்களும் தூங்குகிறார்கள். அதுவும் எனக்கு பிடிக்காது. கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் நான் இதுபோன்ற விஷயங்களை செய்யமாட்டேன் என்று தனுஸ்ரீ கூறியிருக்கிறார்.