பாலிவுட்டில் இதான் நடக்கிறது!! நடிகை தனுஸ்ரீ தத்தா அதிர்ச்சி தகவல்..

Gossip Today Bollywood Indian Actress Tamil Actress
By Edward Mar 17, 2026 02:00 PM GMT
Report

தனுஸ்ரீ தத்தா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை. இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். Chocolate: Deep Dark Secrets, Aashiq Banaya Aapne, Speed ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிகர் நானா படேகர் மீது, metoo புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பாலிவுட்டில் இதான் நடக்கிறது!! நடிகை தனுஸ்ரீ தத்தா அதிர்ச்சி தகவல்.. | Tanushree Dutta Exposes Dark Sides Of Bollywood

இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா, தான் 2018ல் metoo புகார் சொன்னதில் இருந்து தன்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள் என புகார் கூறி இருக்கிறார்.

சமீபத்தில் பேசிய தனுஸ்ரீ தத்தா, பாலிவுட்டில் இருண்ட பக்கங்கள் குறித்து பேசியுள்ளது சோசியல் மீடியாக்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், பல கனவுகளுடன் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் இளம் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேசியுள்ளார்.

பாலிவுட்டில் இதான் நடக்கிறது!! நடிகை தனுஸ்ரீ தத்தா அதிர்ச்சி தகவல்.. | Tanushree Dutta Exposes Dark Sides Of Bollywood

பாலிவுட்டில் இதான் நடக்கிறது

சினிமாவில் புதிதாக யாராவது நுழைந்தால், முதலில் அவர்களிடம், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நட்சத்திர ஹீரோயினாக வருவீர்கள் என்று ஆசைவார்த்தை கூறி வலை வீசுவார்கள். உங்கள் திறமைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், அங்க அவர போய் பாருங்க, இங்க இவரைப்போய் பாருங்க என்று கூறி இளம் பெண்களை தவறாக வழிநடத்தி திசைத்திரும்பும் சம்பவங்கள் பாலிவுட்டில் நடக்கிறது.

அப்படியான சூழலில் அறிமுகமில்லாதவர் சாக்லெட் கொடுத்தால் வாங்கக்கூடாது என்று குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லும் விஷயங்களை நினைவிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் கொடுப்பது உண்மையான சாக்லெட் அல்ல, உங்கள் லட்சியங்களையும் ஆசைகளையும் முதலீடு செய்து வீசப்படும் வலை.

பாலிவுட்டில் இதான் நடக்கிறது!! நடிகை தனுஸ்ரீ தத்தா அதிர்ச்சி தகவல்.. | Tanushree Dutta Exposes Dark Sides Of Bollywood

ஆண்களும், பெண்களும் பாலிவுட்டை நோக்கி வருகிறார்கள். ஆனால், அவர் பயன்படுத்தப்பட்டு, பின் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு இறுதியில் தூக்கி வீசப்படுகிறார்கள். அவர்களின் கனவுகளும் தூக்கி வீசப்படுகிறது.

அப்படி கனவுகளுடன் வந்தவர்கள் தூக்கி வீசப்படும்போது, அவர்கள் மீள முடியாத துயரத்திற்கு ஆளாகிறார்கள். பின் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் மனரீதியாக மொத்தமாக உடைந்துபோய், கனவுகளை கைவிட்டு தங்கள் சொந்த ஊருக்கே திரும்பிவிடும் அவலநிலைதான் உள்ளது என்று தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.