வெறும் லட்ச சம்பளம் போதாது.. கண்ணீரில் மூழ்கும் பிரியா பவானி சங்கரின் கேரியன்..

Priya Bhavani Shankar Thiruchitrambalam Yaanai
By Edward Oct 07, 2022 09:14 AM GMT
Report

நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சீரியலில் வாய்ப்பு கிடைத்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற விஜய் தொலைக்காட்சி தொடரில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பு வெள்ளித்திரையில் கதாநாயகியாக மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் கடைக்குட்டி சிங்கர், மான்ஸ்டர், மாஃபியா, ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், பிளட் மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

யானை, திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்து விட்டு காதலருடன் வெளிநாட்டில் இரு மாதங்கள் தங்கி நாட்களை கடத்தினார்.

வெறும் லட்ச சம்பளம் போதாது.. கண்ணீரில் மூழ்கும் பிரியா பவானி சங்கரின் கேரியன்.. | Tearful Priya Bhavani Shankar How I Am From Now

கர்ரர் கண்டீசன்

வெறும் 10, 20 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்று வரும் பிரியா பவானி சங்கர் துணை நட்சத்திரமாகவே நடித்து வருகிறார். அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல, இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகைக்கு மார்க்கெட் அப்படியே தான் அமைந்து வருகிறது.

சம்பளத்தை உயர்த்தி கேட்டாலும் அதை கொடுக்க தயாரிப்பாளர்களும் நோ சொல்லி விடுகிறார்களாம்.

இதனால் நடித்தால் லீட் ரோல் தான் என்ற கர்ரர் கண்டீசனை போட்டு நடிக்க போகிறாராம். அப்போது தன் மார்க்கெட் கொஞ்சம் ஸ்ட்ராங்காக அமையும் என முடிவெடுத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.