யோவ் அமாவாசை? இதே ஏவுகணை தவறுதலா சைனால விழுந்திருந்தா! இந்திய ஏவுகணை மீம்ஸ்..
pakistan
meme
missile
indianmissile
By Jai
உலகம் முழுவதும் ரஷ்யா - உக்ரைன் போர் நடவடிக்கைளுக்கு பின் பல நாடுகள் ஆயுதங்களை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில் இந்தியாவும் அந்த வேலையில் ஈட்டுபட்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியாவில் ஏவுகணை சோதனை நடத்திய போது ஏவுகணையில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் விழுந்துள்ளது.
ஏவுகணை விழுந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டது. மேலும் இதுபோல் மீண்டும் தொடர்ந்தால் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.





