தேரே இஷ்க் மே படம் எப்படி இருக்கு!! தனுஷுக்கு இது ஹிட்டா? இல்லையா?
தேரே இஷ்க் மே
இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், க்ருத்தி சனோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தேரே இஷ்க் மே. ஆனந்த் எல் ராய், ஹிமான்ஷு ஷர்மா, பூஷன் குமார், கிருஷ்ணன் குமார் உள்ளிட்டவர்கள் தயாரித்துள்ள இப்படம் 28 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
ஏற்கனவே ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வரும் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் ஏ ஆர் ரஹ்மான் இசைக்காகவே ரசிகர்கள் ஆவலுடன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள்.

உமைர் சந்து
இந்நிலையில் பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து பகிர்ந்த பதிவில், படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் படத்திற்கு உயிர் என்று கூறியிருக்கிறார்.
இப்படத்திற்கு 4 ஸ்டார்கள் வழங்கியுள்ள உமைர், 2025ன் சிறந்த உணர்வுபூர்வமான காதல் கதை எனாறும் சிலிர்க்க வைக்கும் தருணங்களும், பின்னணி இசையும், கிளைமேக்ஸ் தான் படத்தின் உயிர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது. தனுஷும்,க்ருத்தி சனோனும் தங்கள் திரை வாழ்க்கையின் சிறந்த நடிப்பை வெளிப்படித்தியுள்ளனர்.
இந்த அற்புதமான படத்திற்காக அவர்கள் விருதுகளை பெற தகுதியானவர்கள், கண்டிப்பாக பாருங்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
க்ருத்தி சனோன்
மேலும் ஆங்கில ஊடகத்திற்கு நடிகை க்ருத்தி சனோன் அளித்த பேட்டியொன்றில், பல தீவிரமான காட்சிகள், கிளைமேக்ஸ் மற்றும் அதற்கு முந்தைய காட்சிகள் மிக நீளமாக இருந்தன. அவை மிகவும் களைப்படையச் செய்தது.
சுமார் 5-6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அந்தக்காட்சிகள் மிகவும் நெருக்கமானதாக இருந்ததாக நடிகை க்ருத்தி சனோன் பகிர்ந்துள்ளார்.