சிவகார்த்திகேயனை எனக்கு தெரியாது!! ராதிகா கேட்டதும் சட்டென பதிலளித்த நடிகை ஷாலினி..வீடியோ..

Sivakarthikeyan Radhika Sarathkumar Shalini
By Edward Feb 26, 2026 05:00 AM GMT
Report

தாய் கிழவி

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி நாளை பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகயுள்ள படம் தான் தாய் கிழவி.

இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. சூர்யா, ஜோதிகா, ஷாலினி அஜித், பிரபு, ராதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

சிவகார்த்திகேயனை எனக்கு தெரியாது!! ராதிகா கேட்டதும் சட்டென பதிலளித்த நடிகை ஷாலினி..வீடியோ.. | Thaai Kizhavi Premiere Radhika And Shalini S Fun

நடிகை ஷாலினி

இந்நிலையில் ஷோ முடிந்து வெளியே வந்த நடிகை ஷாலினியை நடிகை ராதிகா அன்போடு வரவழைத்தார். அப்போது ஷாலினியிடம், சிவாவை தெரியும்ல என்று கேட்க, அதற்கு ஷாலினி, சிவாவை தெரியாதே என்று சட்டென சிரித்தபடி பதிலளித்தார்.

அதற்கு ராதிகா, தெரியாதா? அப்படியே தெரியாமலேயே இருங்கள் என்று ராதிகா ஒரேபோடு போட்டு கலாய்த்தார். அதன்பின் ஷாலினியை பார்த்து சிவகார்த்திகேயன் கைக்குலுக்கு வரவேற்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.