பீஸ்ட் தோல்விக்கு நான் தான் காரணம்? தலைவருக்கு விஜய் கால் செய்து இது தான் சொன்னாரா?
டாக்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 13 ஆம் தேதி உலகம் எங்கும் தியேட்டர்களில் வெளியானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு திருப்தி தந்தாலும் கலவையான விமர்சனத்தையே பெற்று வந்தது.
அதிலும் லாஜிக் மீரல்கள் சில சொதப்பலான காட்சிகள் இடம்பெற்று ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனிரூத் கூட்டணி சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வீடியோவாக வெளியானது.
ஆனால் பீஸ்ட் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் சில குழப்பத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து வந்தார். இதுகுறித்து இணையத்தில் பல வதந்திகள் வைரலானதை தொடர்ந்து விஜய் நேரடியாக சூப்பர் ஸ்டாருக்கு கால் செய்து பேசியிருக்கிறாராம்.
அற்புதமான் இயக்குனர் நெல்சன், சில தவறுகள் செய்துவிட்டார். ஆனால் உங்களுக்கு கண்டிப்பான எந்த விதத்திலும் ஏமாற்றமாட்டார். ஒருசில இடங்களில் நான் தான் கதையை மாற்ற சொல்லி இருந்தேன். அதுதான் பீஸ்ட் பட தோல்விக்கு காரணமாகவும் இருந்தது.
நீங்கள் நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறாராம் விஜய். அப்படியொரு குழப்பத்தில் இருந்த ரஜினிகாந்த் விஜய் கூறியதும் சற்று தெளிவாகினாராம்.
இதையடுத்து தலைவர் 169 படத்தினை நெல்சன் இயக்குவது உறுதியாகியது. விஜய் இப்படி பேசியது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் விஜய்யை நினைத்து பெருமையாக இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.