தளபதி 66யில் விஜய்க்கு ஜோடியாகும் கதநாயகி யார்? 3 அழகிய நடிகைகளின் லிஸ்ட்

vijay keerthysuresh rashmikamandanna kiaraadvani thalapathy66
By Edward Sep 28, 2021 03:05 PM GMT
Report

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தளபதி 65 படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வரும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடித்தும் வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்றபோதே தளபதி 66ன் அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ள இப்படம் அதிகாரப்பூர்வமாக புகைப்படத்துடன் வெளியானது. தளபதி 66 படத்தின் பூஜை அக்டோபர் 15ல் துவங்கவுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து பெரியதாக எடுத்துக்கொள்ளப்போகும் அப்டேட் வில்லன் மற்றும் கதாநாயகி ரோலில் நடிக்கவிருப்பவர்கள் தான்.

வில்லன் நடிகர் நானியிடம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க மூன்று நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த லிஸ்டில் நடிகை கீர்த்தி சுரேஷ், ரஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பெயர்கள் இடம்பெற்றிருக்கிறதாம். கதையை பொறுத்து இப்படத்தின் கதாநாயகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.