விக்-ஐ வைத்து விஜய்யை கலாய்த்த பயில்வான்!! கண்டமேனிக்கு திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்...
சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யூடியூப் சேனலில் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து தற்போது வரை சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்களின் அறியப்படாத விசயங்களை பகிர்ந்தும், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட ஒருவரையும் விட்டுவைக்காமல் அவதூறாக பேசி வருகிறார்.
அந்தவகையில், நடிகர் விஜய் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக விக் வைத்து நடித்து வருகிறார் என்றும் அவரது தந்தை எஸ் ஏ சி-க்கு வயதானாலும் அவரின் முடி உதிராமல் இருக்கிறது விஜய்க்கு இந்த வயதில் முடி உதிர்ந்துவிடுகிறது என்றும் இதற்கு காரணம் அவர் பயன்படுத்தும் ரசாயனம் கலந்த ஷாம்புகள் தான் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை உலகநாயகனுக்கு இருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் முடியை வளர்த்துக்கொண்டார். அதேபோல் ரஜினிகாந்த் தனக்கு வழக்கை தலை இருப்பது தெரிந்துவும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விக் அணியாமல் பல நிகழ்ச்சிகளுக்கு இந்த வயதிலும் கலந்து கொள்கிறார். ஆனால் விஜய் விக் வைத்து வலம் வருகிறார்.
விக் வைப்பது தவறில்லை, ஆனால் பல விதவிதமான விக்கை பயன்படுத்தாமல் ஒரே விக்கை பயன்படுத்துங்கள் என்று கூறியதோடு பனையூரில் நடைபெற்ற மீட்டிங்கிற்கு விஜய் வந்த போது நீண்ட முடி விக் அணிந்து வந்ததை மோசமான பயில்வான் விமர்சித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் கடுமையாக பயில்வானை தாக்கி பேசி வருகிறார்கள்.