காதலரை கரம்பிடித்த கீர்த்தி சுரேஷ்.. திருமணத்தில் கலந்துகொண்ட தளபதி விஜய்
Vijay
Keerthy Suresh
Marriage
By Kathick
கீர்த்தி சுரேஷ்
முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது காதலை அறிவித்தார். 15 வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறோம் என்றும் கூறியிருந்தார்.
திருமணம்
நேற்று தனது திருமண கொண்டாட்டத்திற்கு தயாராகும் புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார். இந்த நிலையில், இன்று கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனியின் திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் கீர்த்தி - ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டுள்ளார். விஜய்யின் புகைப்படமும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..