நியூ லுக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்.. ஜனநாயகன் பட ஷூட்டிங்கில் நடந்த சர்ப்ரைஸ்

Vijay Viral Video JanaNayagan
By Bhavya Apr 14, 2025 08:30 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதே நேரத்தில் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் சினிமாவில் இருந்து முழுமையாக விலகப்போவதாக அறிவித்துவிட்டார்.

நியூ லுக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்.. ஜனநாயகன் பட ஷூட்டிங்கில் நடந்த சர்ப்ரைஸ் | Thalapathy Vijay New Look Video Goes Viral

சர்ப்ரைஸ்

இதனால் ரசிகர்களுக்கு ஜனநாயகன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. தற்போது, சென்னை போரூரில் உள்ள டி.ஆர்.கார்டனில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் அவரைக் காண அங்கு சென்றுள்ளனர். தன்னைக் காண குவிந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு விஜய் சென்றுள்ளார்.

அப்போது கண்ணாடி அணிந்து புது லுக்கில் செம ஸ்மார்ட் ஆக காட்சி அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.