விஜய்யா வேண்டவே வேண்டாம்! 80ஸ் நடிகர்களையும் விடாத இயக்குனர்..
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படம் வெளியாகும் முன்பே தளபதி 66 படத்தின் பூஜையும் ஆரம்பித்து முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் வம்சி கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் இரு அண்ணன் கதாபாத்திரம் விஜய்யுடன் நடிக்கவுள்ளார்களாம். அப்படி யாரை அண்ணனாக போட படக்குழு யோசித்து வந்த நிலையில் சரத்குமாரையும் புக் செய்துவிட்டார்கள்.
ஆனால் அவர் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் 80ஸ் காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்ட நடிகர் மைக் மோகன் விஜய்யின் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தது.
ஆனால் இந்த தகவலை முற்றிலும் மறுத்திருக்கிறார் நடிகர் மைக் மோகன். அவரை தொடர்ந்து நடிகர் பிரசாந்திடமும் இயக்குனர் பேச அவரும் வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம்.
ஒரே காலக்கட்டத்தில் தான் நானும் விஜய்யும் அறிமுகமாகி வளர்ந்தோம். அப்படியிருக்க நான் எப்படி அவருக்கு அண்ணனாக என்று கூறி வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டாராம்.