இனிமே என்னல்லா பாக்க போகுறோமோ? ராஷ்மிகாவால் மிரண்டு போயிருக்கும் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் படம் என்றாலே ரசிகர்கள் மிரளவைக்கும் அளவிற்கு கொண்டாடுவார்கள். அப்படி தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. வரும் ஏப்ரல் 13ஆம் தேதி 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இப்படத்தின் அனைத்து வேலைகளை முடித்துவிட்டு படக்குழுவினர் ரிலீஸிற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தளபதி66 படத்தின் பூஜை நேற்று ஏப்ரல் 06 அம் தேதி சென்னையில் ஆரம்பமானது.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மொழியை மையப்படுத்தியதாக அமைந்து சென்னை, ஹைதராபாத், வெளிநாடு என படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளது.
இப்படத்தில் இசையமைப்பாளர் எஸ் தமன் இசையில், நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். படத்தின் பூஜையில் ராஷ்மிகா மந்தனா ஓவராக ரியாக்ஷன் கொடுப்பதை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் பயந்துள்ளனர்.
அதற்காக சிலர் ஷூட்டிங் முடியும் வரை இவ பண்ற குரங்கு சேட்டை எல்லாமே பாக்கனுமே என்று கிண்டல் செய்து வருகிறார். எக்ஸ்பிரஷன் குயின் என்று தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகாவிற்கு பேர் உள்ளதை இங்கும் காமித்து விடாதேம்மா என்று கருத்துகளை கூறியும் வருகிறார்கள்.