அனிருத்தை தூக்கி எறிந்த தளபதி விஜய்! அக்கடத்தேச படம் தானே அதான் காரணம்?
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. படத்தின் பிரமோஷனுக்காக நெல்சன் விஜய்யை பேட்டிக்கண்ட நிகழ்ச்சி 10 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தின் ஷூட்டிங்கினை கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கவுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கமிட்டாகினார்.
அவரை தொடர்ந்து அனிருத் தான் இசையமைப்பார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கும் அனிரூத் தான் தளபதி 66 இருப்பார் என்ற நிலையில் எஸ் தமன் இசையமைக்க கமிட்டாகியுள்ளாராம்.
இதனை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Welcoming onboard our darling music director @MusicThaman #Thalapathy66@actorvijay @directorvamshi @iamRashmika #ThamanJoinsThalapathy66 pic.twitter.com/fP3M29kcPJ
— Sri Venkateswara Creations (@SVC_official) April 5, 2022