அனிருத்துக்கு தெலுங்கு வாய்ப்பு கிடைக்கிறது..பணத்துக்காக மட்டுமே!! இசையமைப்பாளர் தமன் ஓபன்..
Tamil Cinema
Anirudh Ravichander
Thaman
By Edward
இசையமைப்பாளர் தமன்
தென்னிந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் தமன், சமீபத்தில் பாலைய்யா நடிப்பில் வெளியான அகண்டா 2 படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தமன் அளித்த பேட்டியொன்றில் தமிழில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதில், தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக படவாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் ஒற்றுமை, தெலுங்கில் இல்லை.
பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை, பணத்திற்காக மட்டும் தான் செய்கிறார்கள், நாம் இதை வருத்தமாக கூறுகிறேன் என நினைக்க வேண்டாம் என்று தமன் ஓபனாக பேசியிருக்கிறார்.