ஓவர் மேக்கப் உடம்பு ஆகாதம்மா! தாமரை இப்படியாகிட்டாங்களே..

makeup biggbosstamil5 thamarai
By Edward Jan 18, 2022 05:45 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழாமை நிறைவடைந்தது. ராஜு வின்னராகவும் பிரியங்கா ரன்னராகவும் அறிவித்து வீடு திரும்பினர். நிகழ்ச்சியில் 6ஆம் இடத்தினை பிடித்த தாமரை இறுதி வரை வருவார் என்று எதிர்ப்பார்த்தனர் ரசிகர்கள்.

அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்த போது சண்டையும் சச்சரவுமாக தான் இருந்தது. அப்படியும் ரசிகர்கள் மனதை ஈர்த்து வந்தார். எலிமினேட்டாகி சென்று சிறப்பு விருந்தினராக வரும் போது முற்றிலும் மாறிய வேறொரு தாமரையாகத்தான் வந்தார்.

ஆடையிலும் சரி உடல் நடை மேக்கப் எல்லாம் மாறியது. பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியிலும் கூட இதுவரை பார்க்காத தாமரையை பார்த்தோம்.

ஓவராக பந்தா காட்டி நடப்பது பேசுவது என இருந்தால் கேலியும் கிண்டலுக்கும் ஆளாக நேரிடும் தாமரை என்று கூறி வருகிறார்கள். இதேபோல் தான் ஜூலியும் பிக்பாஸ் வீட்டில் எளிமையாக இருந்து பின்பந்தா காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.