தாமரைக்கு காசு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்த ஐக்கி! பொறாமையில் தத்தளித்த பிரியங்கா..

Bigg Boss Priyanka Deshpande
By Edward May 23, 2022 06:05 AM GMT
Edward

Edward

Report

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த ஆண்டு ஆரம்பிது இந்தாண்டு ஜனவரியில் முடிந்தது. ராஜு வின்னராகவும் பிரியங்கா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பிறகு பிக்பாஸ் அல்டிமேடி நிகழ்ச்சியும் ஆரம்பமானது.

இந்த இரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தாமரை கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்தார். அப்படி நிகழ்ச்சியில் இருக்கும் போது இது செய்வேன் அது செய்வேன் உனக்கு என்று கூறிய சிலர் கண்டுக்கொள்ளவே இல்லை என்று சமீபகாலமாக பேசி வந்தார்.

அப்படி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் தன் கணவருடன் ஜோடி போட்டு நடனமாடி வருகிறார் தாமரை. கடந்த எபிசோட்டில் ஐக்கி பெர்ரி பற்றிய சில தகவலை கூறி உருக வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு அதிகமாக கூடவே இருந்து பார்த்து கொண்டது ஐக்கி தான். எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொடுத்தார். நான் வீட்டுக்கு கிளம்பும் போது கூட எனக்கு காசு கொடுத்து அனுப்பி வைப்பாள்.

அதனால் அவரை ரொம்ப பிடிக்கும் என்று கண்ணாடி மாட்டிவிட்டு கட்டியணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் கடுப்பாகிய பிரியங்கா முகத்தில் சில ஏமாற்றமும் பொறாமையும் தென்பட்டதாக ரசிகர்கள் கருத்துக்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.