இந்த டைட்டில் போனா என்ன! பிக்பாஸ் தாமரைக்கு அடித்த லக்கு
பிக்பாஸ் 5 சீசனில் புதுமுகமாக அறிமுகமாகி கடைசி 6ஆம் இடத்தில் இருந்து வீட்டினை விட்டு வெளியேறிவர் தாமரைச்செல்வி. நடனகலைஞராக இருந்து பல கஷ்டங்களுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திகொண்டு கடந்த வாரம் எவிக்டாகினார்.
தாமரை பணப்பெட்டியை எடுத்து கொள்ள மறுத்து இந்த பணத்தை வெளியில் வேலை செய்து சம்பாதித்து கொள்கிறேன் என்று கூறியது பலரை நெகிழவைத்தது. அதேபோல் பிரீஸ் டாஸ்க்கின் போது அவரது மகன் வந்த காட்சியும் நெகிழவைத்தது. தாமரை முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் போனது.
இதனால் பல கஷ்டங்களை சந்தித்தேன் என்று பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது கூறினார். அவருக்கு பிறந்த மகனைத்தான் தற்போது இரண்டாம் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வரும் அவரது கணவர், கூறை வீட்டில் முதலில் இருந்தோம். அவள் சம்பாதித்து தான் தற்போது கட்டடத்தில் வீடு கட்டினார் என்று கூறியுள்ளார். ஆனால் பிறந்த அம்மாவீட்டினை இன்னும் கட்டாமல் வைத்துள்ளார்.
இனி அந்த வீட்டினை கட்டுவார் என்று எதிர்பார்த்து வருகிறார்கள் அவரது குடும்பத்தினர்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. சமையல் என்றால் அவருக்கு கால்தூசியாச்சே..